நூருல் ஹுதா உமர்
தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் ஜனாதிபதி வேட்பாளராக இருந்த மஹிந்த ராஜபக்சவிடம் யுத்தம் முடிவுற்கு கொண்டுவரப்பட்டு அனைத்து மக்களும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை 2005 ஜனாதிபதித்தேர்தலில் முன்வைத்த போது அச்சவாலை ஏற்ற மஹிந்த ராஜபக்ஸ பின்னர் யுத்தத்தை நிறைவிற்கு கொண்டுவந்ததன் காரணமாகவே தான் இன்னும் உயிரோடு இருப்பதாகவும்,இல்லாவிட்டால் இப்போது ஓர் மாவீரராகவே இருக்க வேண்டி ஏற்பட்டிருக்கும் என முன்னால் போராளிகளான பவீத்திரன் மற்றும் இராசேந்திரன் ஆகியோர் உணர்வுபூர்வமாக தெரிவித்தனர்.
அண்மையில் தேசிய காங்கிரஸுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இணைந்துகொள்ளும் நிகழ்வொன்று திருகோணமலையில் தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளர் வைத்தியர் வை.எஸ்.எம்.ஸியா அவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது. அங்கு கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்தும் கருத்துதெரிவித்த முன்னாள் போராளிகள்,
அத்தோடு தேசிய காங்கிரசின் தலைவர் அதாஉல்லாஹ்வின் கொள்கை,தைரியம், உறுதியான நிலைமாறாத எண்ணம் போன்றவையே தங்களை தேசிய காங்கிரஸின் பக்கம் ஈர்த்ததாகவும், தினமும் இவ்வழியினால் பிரயாணம் செய்யும் போது தேசிய காங்கிரசின் தலைவர் அதாவுல்லாஹ்வின் படத்தை கண்டவுடன் வாகனத்தில் இருந்து இறங்கி மரியாதை செலுத்தி விட்டு செல்வதாகவும் முன்னால் தமிழீழ விடுதலை புலிகளின் போராளிகள் தெரிவித்தனர்.
விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தின் சார்பில் பொதுத்தேர்தல் வேட்பாளராக களமிறங்க இருக்கும் வைத்தியர் வை.எஸ்.எம்.ஸியா அவர்களின் வெற்றிக்காக தமிழ் பிரதேசங்களில் தொடர்ச்சியாக பாடுபட தயாராக உள்ளோம் என்றனர்.
இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸின் முன்னால் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஜெ.எம். சுக்ரீ, ஓய்வு பெற்ற இலங்கை போக்குவரத்து சபை ஊழியரும்,சிரேஸ்ட பிரஜைகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளருமான ஜமால்தீன் அவர்களும் கலந்து கொண்டனர்
UMAR LEBBE NOORUL HUTHA UMAR
BBA (HRM), Dip.In. Journalism, IBSL, ICDL
+94 766735454 / +94 757506564
0 comments: