Advertisement

Responsive Advertisement

வவுனியாவில் பாடசாலை அதிபர் ஒருவரின் முகம் சுழிக்கவைக்கும் செயல்


வவுனியா செட்டிகுளம் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர் ஒருவரின் முகம் சுழிக்கவைக்கும் செயல் ஒன்று தற்பொழுது அம்பலமாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது குறித்த பாடசாலையின் அதிபர் அதே பாடசாலையில் பிரதி அதிபராக கடமையற்றும் பெண் பிரதி அதிபரிடம் சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார்.குறித்த பிரதி அதிபரின் கைப்-பை (Hand Bag) மற்றும் ஏனைய அவரது தனிப்பட்ட உடமைகளை பாடசாலையின் ஏனைய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் சோதனை செய்துள்ளார் பைகளில் அவர் தேடிய எதுவும் இல்லை என்ற போதும் தனது செயலை நியாயப்படுத்தும் நோக்குடன் குறித்த அதிபர் செயற்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது பாடசாலை ஆசிரியர்களிடம் கடும்விசனத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் குறித்த பெண் பிரதி அதிபரும் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார் மேலும் இவ்விடயம் தொடர்பாக வலயக்கல்வி பணிப்பாளரிடமும் மனித உரிமை ஆணைக்குழுவிற்கும் முறையிடப்போவதாக பாதிக்கபட்ட பெண் பிரதி அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண் பிரதி அதிபரின் சுயகௌரவத்திற்கு ஏற்பட்ட இழுக்குத் தொடர்பில் வலயக்கல்விப் பணிமனை உடன் நடவடிக்கை எடுத்துதவவேண்டுமென பாடசாலை சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.

Post a Comment

0 Comments