எனது அரசாங்கம் எக்காரணம் கொண்டும் மக்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் தெரியாமல் எந்தவொரு உடன்படிக்கையையும் செய்ய மாட்டாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்று (19) விசேட அறிவித்தலொன்றை விடுத்து இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்து கூறுகையில்,
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினதும் பொதுஜன பெரமுன அரசாங்கத்தினதும் வித்தியாசம் அதுவாகும் எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுடனான எம்.சீ.சீ. உடன்படிக்கை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் இரு குழுக்களும் ஒரே நிலைப்பாட்டிலேயே காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Comments