யுத்தம் முடிவடைந்த போது சர்வதேசத்திற்கும் இந்தியாவிற்கு அன்றைய அரசாங்கம் பல உறுதிமொழிகளைக் கொடுத்தது. ஆனால் தீர்வு எட்டப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று நாடாளுமன்றம் கூடியது. இதன்போது உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
“எமது கட்சியான இலங்கை தமிழரசு கட்சி அல்லது ‘பெடரல் கட்சி’ என அறியப்பட்ட கட்சி குடியுரிமை சட்டத்தின் விளைவாக பிறந்த ஒரு காட்சியாகும். இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம் ஆனது முதலாவது நாடாளுமன்றத்தில் 7 அங்கத்தவர்களை கொண்டிருந்த கிட்டத்தட்ட 8 இலட்சம் மக்களின் வாக்குரிமையை இரத்து செய்தது.
பெரும்பான்மையினரின் விருப்பம் என்ற ரீதியிலேயே ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையை இது பறித்தது மேலும் அவர்களுடைய குடியுரிமையையும் இல்லாமல் செய்தது.
சுதந்திர இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்தின் பேரினவாத செயற்பாடு காரணமாகவே இலங்கை தமிழரசு கட்சி எம் இன அடிப்படையிலான ஒரு கட்சியாக உருவாவதற்கான தேவை உண்டாக்கியது என்பதனை இந்த நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
யுத்தம் முடிவடைந்ததும் இந்தியா உட்பட சர்வதேச சமூகத்திற்கு தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை அரசியல் ரீதியாக அதிகாரப் பரவலாக்கத்தின் ஊடாக தீர்க்கப்படும் என்ற உறுதியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் வழங்கியிருந்தது.
இந்த உறுதிமொழி குறைந்தது மூன்று தடவை இந்தியாவிற்கு வழங்கப்பட்டது. அதிலே 13 ஆவது திருத்தமும் முழுமையாக அமுல்படுத்த்ப்பட்டு அர்த்தமுள்ள அதிகாரப்பாகிவினை அடையும் நோக்கில் 13 ஆவது திருத்த சட்டம் மேலும் கட்டியெழுப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
13 ஆவது திருத்த சட்டத்தின் முழுமையான அமுலாக்கம் என்பது தேசிய மொழியான தமிழ் மொழியில் முழுமையான அமுலாக்கத்தினையும் உள்ளடக்குகினறது.
ஒவ்வொரு மக்களின் சமத்துவம் என்பது அவர்களின் எண்ணிக்கையின் பலத்தில் தங்கியிருக்கவில்லை. எமது ஜனநாயகமானது தப்பித்துக்கொள்ளவும் செழிப்படையவும் வெளிப்படையான பேரினவாதத்தை நோக்கி செல்லாமல் இருக்க வேண்டும் என்றால், இந்த கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
நாம் விரும்புவதை மாத்திரம் பொறுக்கிக்கொள்ளாமல் இருப்போமேயாகில் சிங்கப்பூர் ஒரு நல்ல உதாரணம். சிங்கப்பூர் நான்கு தேசிய மொழிகளை கொண்ட நாடு. அவர்களின் தேசிய கீதமானது மொத்த சனத்தொகையில் 15% மாத்திரம் பேசும் மலே மொழியில் இசைக்கப்படுகிறது” என்றார்.
0 Comments