Advertisement

Responsive Advertisement

தாக்குதலுக்குள்ளான முக்காமைத்துவ உதவியாளர் தவப்பிரியா வினை வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டார் பா.உ.கோடீஸ்வரன்


நிந்தவூர் கமநல சேவை   நிலையத்தில் பணி புரியும் பெண் தாக்கப் பட்டு  வைத்தியசாலையில் அமனுமதிக்கப் பட்ட சம்பவத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வன்மையாக கண்டித்துள்ளார்.
கடந்த  புதனன்று 1ஆம் திகதியன்று   நண்பகல்   இச்சமபவம்  இடம்பெற்றுள்ளதுடன் நிந்தவூர் கமநல கேந்திரமத்திய நிலையத்தில் பணியாற்றும் நிலைய முகாமைத்துவ உதவியாளர் திருமதி தவப்பிரியா சுபராஜ்(வயது34) என்பவரே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.



  மேலும் தாக்குதலுக்கு உள்ளான குறித்த பெண்ணை இன்று (4) காலை கல்முனை ஆதர வைத்திய சாலைக்கு சென்று சந்தித்த பின்னர்   பாராளுமன்ற உறுப்பினர்  எமக்கு கருத்து தெரிவிக்கையில்.   குறித்த மேலதிகாரி ஊழியர்கள் மீது பல்வேறு சந்தர்பங்களில் தாக்குதலுக்கு உள்ளாக்கியதோடு பல அசௌகரியங்களையும் ஏற்படுத்தியுள்ளார். பெண் உத்தியோகஸ்த்தரை தாக்கிய மேலதிகாரியை இதுவரை பொலிஸார் கைது செய்யாமல் இருப்பது மிகுந்த மன வேதனையை தருகின்றது.
நான் பொலிஸ் மற்றும் குற்றப்புலனாய்வினரை தொடர்பு கொண்டு விரைந்து கைது செய்யுமாறு தொடர் அழுத்தங்களை கொடுத்து வருகின்றோம்,
தாக்குதலுக்கு உள்ளான பெண் உடல் ரீதியாகவும் ,உள ரீதியாகவும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதோடு தாக்குதல் மேற்கொண்ட அதிகாரியை பணியிடை நீக்குமாறு வலியுறுத்தியுள்ளேன்.
இந்த தாக்குதல் சம்பவத்தினை தமிழ் மக்கள் இனவாத சம்பவமாகவும் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதியாகவுமே பார்கின்றனர். ஆகவே இன முரண்பாடு ஏற்படா வண்ணம் அந்த அதிகாரியை கைது செய்யுமாறு பொலிஸாரை வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments