Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வீதியை விட்டு விலகிய சொகுசு வேன் விபத்து சாரதி மாயம்: (

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஸ்ரதன் வூட்லண்டபசார் பகுதியில்  வெள்ளிக்கிழமை 03-01-2020  மாலை ஐந்து மணியளவில் வீதியை விட்டு விலகி தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகிள்ளதாகவும்,குறித்த வேனினை செலுத்திய சாரதி தலைமறைவாகியிருப்பதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வேன் பள்ளத்தில் பாய்ந்த உடன் சாரதி இறங்கி வேனினை தாழ்பால் இட்டு வீதியில் ஹட்டன் பக்கமாக நடந்து சென்றதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் சுமார் ஒரு மணித்தியாலங்கள் வரை எந்த வித தகவலும் வழங்காமையினால் பொலிஸார் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை தோற்று வித்துள்ளன.

வேன் சாரதி போதையில் வாகனம் செலுத்தினாரா?,அல்லது சட்ட விரோத பொருட்கள் ஏதும் குறித்த வேனில் உள்ளனவாஅல்லது வேறு ஏதும் காரணங்களினால் தலைமறைவாகினாராபோன்று பல்வேறு சந்தேகங்களை ஏற்பட்டுத்தியுள்ளன.

இந்த வேன் விபத்து இடம்பெற்றதுதொடர்பாகவும் சாரதி தொடர்பாகவும் வேனில் காணப்படும் வாகன அனுமதி பத்திரத்தனையும்,பொது மக்களின் தகவல்களின் அடிப்படையிலும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த வேன் மேலும் பற்றைகளில் சிக்கியிருப்பதனால் பள்ளத்திற்கு செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சாரதியில்லாததனால் அதனை தடுப்பது சிக்கலாக காணப்படுவதாக பொது மக்கள் தெரிவித்தனர்.


யோ.கமல்ராஜ்

Post a Comment

0 Comments