Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பிரதமர் மஹிந்த பயணிக்கவிருந்த வீதியில் வெடிகுண்டுகள் மீட்பு


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பயணிக்கவிருந்த இடத்தில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை, கொரொஸ்துவ விகாரைக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது துப்பாக்கி பாகங்கள் மற்றும் தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
குறித்த விகாரையில் இடம்பெறவிருந்த நிகழ்விற்கு முன்னர் வீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
விகாரைக்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்திலிருந்து இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதில் தோட்டா ஒன்று, இரண்டு வெற்று வெடிமருந்து குண்டுகள், இரண்டு ஆர்.பி.ஜி தோட்டாக்கள் மற்றும் கைத்துப்பாக்கியின் பாகங்கள் ஆகியவைகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments