Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கிய விமானம்- இருவர் சடலங்களாக மாறிய சோகம்..!


சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் இருந்து இந்தோனேஷியாவின் ஜூவேண்டா நகருக்கு பயணித்து கொண்டிருந்த இந்தோனேஷியா விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணித்த இரண்டு பயணிகளுக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக ஏ330 ரக இந்தோனேஷியா லயன் ஏயார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.

285 பயணிகளுடன் பயணித்த குறித்த விமானத்தில் 77 வயதான பெண் ஒருவருக்கும் 64 வயதான ஆண் ஒருவருக்கும் ஏற்பட்ட சுகவீனம் காரணமாகவே குறித்த விமானம் தரையிறக்கப்பட்டது.

அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் குறித்த விமானம் தறையிறக்கப்பட்ட போதும் அவர்கள் முன்னதாகவே உயிரிழந்து காணப்பட்டதாக விமான நிலைய மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தோனேஷிய பிரஜைகள் இருவரே இவ்வாறு உயிரிழந்ததாக எமது விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments