Home » » யாழ் உள்ளிட்ட வடக்கு மக்களுக்கு கிடைக்கும் அரிய சந்தர்ப்பம்! எச்சரிக்கை விடுக்கும் ஆய்வாளர்கள்

யாழ் உள்ளிட்ட வடக்கு மக்களுக்கு கிடைக்கும் அரிய சந்தர்ப்பம்! எச்சரிக்கை விடுக்கும் ஆய்வாளர்கள்

10 ஆண்டுகளின் பின்னர் எதிர்வரும் 26ஆம் திகதி வானில் தென்படவுள்ள அரிய சூரிய கிரகணத்தை பார்வையிடுவதும் ஆபத்தானது என வானியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வெற்றுக் கண்களினால் மாத்திரமின்றி, சாதாரண மற்றும் கறுப்பு நிற கண்ணாடிகளை பயன்படுத்தியும் பார்க்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளனர். 
எனவே, இதுபோன்ற ஆபத்தான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என வானியல்துறை பேராசிரியரான சந்தன ஜயரத்ன, பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.வட பகுதிக்கு இந்த சூரிய கிரணம் முழுமையாக தென்படும்.
மன்னாருக்கு மேல்திசையில் யாழ்ப்பாணம் வரையான பகுதிகளில் அந்த அரிய சூரிய கிரகணம் முழுமையாக தென்படக்கூடும்.
இதேநேரம், தென் பகுதியில் இந்த சூரிய கிரகணம் பகுதி அளவிலேயே தென்படும்.எதிர்வரும் 26 ஆம் திகதி காலை வேளையில் இந்த சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்.
முழுமையான சூரிய கிரகணம் காலை 8.10க்கு ஆரம்பமாகி முற்பகல் 11.25 அளவில் நிறைவடையும்.இந்த சூரிய கிரகணத்தை வெற்றுக் கண்களினால் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என ஆர்த்தர் சி. க்ளாக் மத்திய நிலையத்தின் உடுத்தொகுதிகள் பிரிவின் விசேட ஆய்வாளரான ஜனக அடஸ்சூரிய முன்னதாக தெரிவித்திருந்தார்.
விசேட கண்ணாடியோ அல்லது பாதுகாப்பு உபகரணத்தையோ பயன்படுத்துவது சிறந்ததாகும்.எனவே, வெற்றுக் கண்களினால் மாத்திரமின்றி, சாதரண மற்றும் கறுப்பு நிற கண்ணாடிகளை பயன்படுத்தி பார்வையிடுவதும் ஆபத்தானது என வானியல்துறை பேராசிரியரான சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்களில் அந்த சூரிய கிரகணத்தை பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அங்கு வருகை தந்தால், அதனைப் பார்வையிட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற அரிய சூரிய கிரகணத்தை எதிர்வரும் 2031 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதியே அவதானிக்க முடியும் என்றும் வானியல்துறை பேராசிரியரான சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |