Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நல்லூரில் உதயமானது புதிய கட்சி! தலைவர், செயலாளர் விபரம் வெளியானது

தமிழ் தேசிய கட்சி என்ற பெயரில் புதிய கட்சியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ரெலோ இயக்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் என்.சிறிகாந்தா தலைமையில் இன்று இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – நல்லூரில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வும் ஊடக சந்திப்பும் இடம்பெற்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, கட்சியின் விதிமுறைகளை மீறி செயற்பட்டதாக கூறி, என்.சிறிகாந்தா உள்ளிட்ட சிலர் டெலோ இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டனர்.
இந்த நிலையிலேயே, என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ் தேசிய கட்சி என்ற பெயரில் இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புதிய கட்சியின் செயலாளராக எம்.கே.சிவாஜிலிங்கம், துணைத் தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி சிவகுருநாதன், சட்டத்துறை செயலாளராக சட்டத்தரணி ஜெயகாந்தன், தேசிய அமைப்பாளராக சில்வெஸ்டர் விமல்ராஜ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதுதவிர, கல்வி, நிதி, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments