Home » » மட்டக்களப்பு வைத்தியசாலையில் நிகழும் மரணங்கள்! கடுமையான சட்ட நடவடிக்கை

மட்டக்களப்பு வைத்தியசாலையில் நிகழும் மரணங்கள்! கடுமையான சட்ட நடவடிக்கை

வடக்கு கிழக்கு இளைஞர் யுவதிகளுக்காக ஜனாதிபதி ஒரு லட்சம் வேலை வாய்ப்புக்களை உருவாக்கி அதனை சமமாக வழங்கவுள்ளார். வடக்கு கிழக்கு இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பற்றிருக்கின்றனர். இவ்வேளையில் முன்னாள் ஜனாதிபதி, வடக்கு கிழக்கிலுள்ள வைத்தியசாலையில் அவரது பகுதி மக்களுக்கு தொழில் வாய்ப்புக்களை அநீதியாக வழங்கியுள்ளார்.
ஆனால் எமது புதிய ஜனாதிபதி இனிவரும் காலங்களில் ஒருலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி அதனை சமமாக வழங்கவுள்ளார். இதனை அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சி தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் மட்டக்களப்பிலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நடந்த ஊடக சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுகாதார அமைச்சினால் மட்டக்களப்பு வைத்தியசாலையில் நிகழும் கவனயீன மரணங்கள் தொடர்பில் உரிய சட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். இங்குள்ள வைத்தியசாலைகளின் ஆளணி தேவைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
தமிழ் மக்களுக்கு நன்மை தரக்கூடிய அரசியல் தீர்வு விடயத்தில் நாங்கள் ஆணித்தரமாகவிருப்பதோடு கடந்த அரசாங்கத்திலும் புதிய அரசாங்கத்திடமும் இவ்விடயங்களை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளேம்.
மேலும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களின் பூர்வீக வாழ்வாதார காணிகளை வன இலாகா அதிகாரிகள் நில அபகரிப்பை நிர்வாக பிரச்சனையை முன்னெடுத்து வருகின்றது. இதனை தடுக்க அப்பகுதி அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர் ஊடாக அதனை தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |