Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்முனையில் சமூக நல்லிணக்கம் குறித்த செயலமர்வு


சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு சமூக நல்லிணக்கம் குறித்த செயலமர்வு செவ்வாய்க்கிழமை காலை கல்முனை கிறிஸ்டா இல்லத்தில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் ஏ.எல். இஸ்ஸதீன் தலைமையில் குறித்த செயலமர்வு இடம்பெற்றதுடன் சமுகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் சர்வமத தலைவர்கள், பல்கலைகழக மாணவர்கள், கல்விசார் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது அம்பாறை மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் ஏ.எல். இஸ்ஸதீன் கருத்து தெரிவிக்கையில்,
சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வழிவகைகள், நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் மதம் சார்ந்த கருத்துக்கள் வெளியிடுவது, மதம் சார்ந்த கருத்துக்கள் சமூக ஊடகங்களின் பங்களிப்பு , நல்லிணக்கத்தை வளர்ப்பதில் இளைஞர், யுவதிகளின் பங்கு, ஊடகங்களின் பங்கு குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதில் சமூக ஊடகங்களின் பங்கு உண்டு, நல்லிணக்கத்தை சீர்குலைப்பதில் சமூக ஊடகங்களின் பங்கு இல்லை எனும் தொனிப்பொருளில் பல்கலைகழக மாணவர்களின் விவாதமும் இடம்பெற்றது.
மேலும் நல்லிணக்கதை வளர்ப்பதில் மதங்களின் பங்களிப்பு தொடர்பாகவும் மத தலைவர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.






Post a Comment

0 Comments