கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும சமர்ப்பித்த பிரேரணையை அடுத்து தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடமாக தரம் உயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபயவின் கொள்கை பிரகடனத்திற்கு அமைய, நாட்டின் அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரிகளாக மாற்றும் திட்டத்தின் கீழ் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்துவதற்கு குழுவொன்றும் நியமிக்கப்படவுள்ளது.
கல்வி மற்றும் உயர் கல்வி துறையை சேர்ந்த அதிகாரிகள் இந்த குழுவில் உள்ளடக்கப்படவுள்ளனர்.
இதேவேளை, கல்வி சேவைக்கான புதிய திட்டங்களை வகுப்பதற்கான குழுவை நியமிக்க அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், இந்த குழுவில் கல்வி துறைசார் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்கள் உள்ளடக்கப்படவுள்ளனர்.
0 Comments