Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பிற்பகல் 3 மணிக்கே இருளாகிப்போன கொழும்பு!



இலங்கையின் மலைநாட்டு பகுதிகளில் எவ்வாறு பிற்பகல் வேளையில் இருள்சூழுமோ அதுபோல இன்றுமாலை 3 மணிக்கே கொழும்பு மாட்டமும் இருளாகிப்போனமையால் மக்கள், வாகனதாரிகள் உட்பட பல்வேறுதரப்பினரும் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர்.
தற்போது இலங்கையை வெளுத்து வாங்கி வருகிறது மழை. இதனால் நாடளாவியரீதியில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்பட்டு உயிரிழப்புக்கள் இடப்பெயர்வுகள் இடம்பெற்று மக்கள் இயற்கையால் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் இன்றையதினம் மாலைவேளை தலைநகர் கொழும்பை இருள்சூழ்ந்து கொண்டுள்ளது மக்களை மேலும் அச்சத்துக்குள் ஆழ்த்தியுள்ளது.

அண்மையில் இந்திய தலைநகர் டெல்லியை காற்று மாசு தாக்கி மக்கள் வெளியே வரமுடியாத அளவுக்கு நிலைமை இருந்தது.அதன் தாக்கம் கொழும்பிலும் உணரப்பட்டது.அந்த தாக்கத்தின் எதிரொலியாக இது இருக்குமோ எனவும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த 2000 ஆம் ஆண்டில் விஞ்ஞானி ஆர்தர் சி கிளார்க் கொழும்பில் சில காலத்தில் இவ்வாறான நிலைமை ஒன்று ஏற்படுமென எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இவ்வாறான சம்பவம் தமிழர் தாயகப்பகுதியான வவுனியா மற்றும் வன்னிப்பகுதிகளிலும் அதிகாலையில் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments