Advertisement

Responsive Advertisement

சந்திரிக்காவை அடுத்து சஜித்துடன் இணைகிறாரா ஜனாதிபதி மைத்திரி? சூடுபிடிக்கும் தேர்தல் களம்



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பு நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக அரசியல் தரப்பு தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்காமல் சுயாதீனமாக இருப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதி ஆரம்பத்தில் எடுத்த தீர்மானத்தை எதிர்வரும் நாட்களில் மாற்றிக் கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட ஆலோசகரும் கட்சியின் முன்னாள் தலைவருமான சந்திரிக்கா குமாரதுங்க, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சுதந்திர கட்சியை காப்பாற்ற வேண்டிய அவசியம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, சந்திரிக்கா நீண்ட கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
இந்நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் பிரஜாவுரிமை குறித்து மீண்டும் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பின்னணிகளின் அடிப்படையில் சஜித் பிரேமதாஸவுக்கான ஆதரவினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் இன்னும் 5 நாட்கள் உள்ள நிலையில், ஜனாதிபதியின் தீர்மானமிக்க முடிவு பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது பலரின் கருத்தாக உள்ளது.

Post a Comment

0 Comments