இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள கோத்தபாய ராஜபக்சவிற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் கோத்தபாய ராஜபக்ச முன்னிலையிலிருக்கிறார். இந்நிலையில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாச தற்போது விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள கோத்தபாயவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கும் தயாராக இருக்கிறேன்.
கடும் பிரசாரங்களுக்கு மத்தியில் மக்களின் தீர்ப்புக்கு நான் மதிப்பளிக்கிறேன். எனக்கு வாக்களித்த மக்களுக்கும் நன்றிக்கூறிக் கொள்கிறேன்.
எனக்காக பிரசாரங்களில் ஈடுபட்டவர்களின் அர்ப்பணிப்பை நான் மறக்கப்போவதில்லை.
கடந்த ஐந்து வருடங்களில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் பணிகளை உரிய முறையில் முன்கொண்டு செல்லவேண்டும்.
தேர்தலுக்கு பின்னர் வரும் சூழ்நிலை அமைதியாக இருப்பதை உறுதிசெய்யுமாறும் புதிய ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கிறேன்.

0 Comments