Advertisement

Responsive Advertisement

பெரியகல்லாறு உதயபுரம் ஸ்ரீ வட பத்திரகாளியம்மன் ஆலய தீ மிதிப்பு உற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியகல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கின் தீ மிதிப்பு உற்சவம் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ இன்று நடைபெற்றது.
இந்துமா சமுத்திரமும் மட்டக்களப்பு வாவியும் சங்கமிக்கும் பெரியகல்லாறு பகுதியில் அற்புதங்கள் கொண்டு அருள்பாலித்துவரும் ஸ்ரீ வடபத்திர காளியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு கடந்த வெள்ளிக்கிழமை கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.
ஐந்து தினங்கள் நடைபெறும் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கில் ஞாயிற்றுக்கிழமை பெரியகல்லாறு சிவசுப்ரமணியர் ஆலயத்தில் இருந்து வாழைக்காய் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்றது.
திங்கட்கிழமை அன்னையின் சப்புரத்திருஉலாவும் செவ்வாய்க்கிழமை காலை சக்தி மகா யாகம் நடைபெற்று அன்று பிற்பகல் நோற்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றதை தொடர்ந்து மாலை கடல்குளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

இன்று அன்னையின் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அற்புதங்கள் நிறைந்ததாகவும் உள்ள தீமிதிப்பு திருச்சடங்கு ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது.
தேவாதிகள் ஆடிவர விசேட பூஜைகள் மற்றுத் தீக்குளிக்கான பூஜைகள் நடைபெற்று இந்த தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
தீமிதிப்பு உற்சவத்தினை தொடர்ந்து சக்திபூஜை நடைபெற்றதுடன் அடியார்கள் அம்பாளுக்கு பூ வைத்து வணங்கும் நிகழ்வு நடைபெற்றது.












Post a Comment

0 Comments