( அஸ்ஹர் இப்றாஹிம்)
கிழக்கு மாகாண கராட்டி சம்மேளனம் ஒழுங்கு செய்துள்ள கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கான கராட்டி சுற்றுப் போட்டி நாளையும் ( 19 ) , நாளை மறுதினமும் ( 20 ) பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாசாலை ) களுவாஞ்சிகுடி கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
அம்பாறை , மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500 மாணவ மாணவிகள் கலந்து கொள்ளும் மேற்படி சுற்றுப் போட்டியில் நாளை சனிக்கிழமை ( 19 ) 14 , 15, 16 , 17 ,21 வயதிற்குட்பட்ட மற்றும் 21 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான காத்தா , குமித் , காத்தா குழுப் போட்டிகளும் , நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமை ( 20 ) 6 தொடக்கம் 13 வயதுப்பிரிவினருக்கான போட்டி நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாண கராட்டி சம்மேளனத்தின் தலைவர் முஹம்மட் இக்பால் தெரிவித்தார்.
இச்சுற்றுப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ மாணவிகள் இவ்வருடம் டிசம்பர் மாதம் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள தேசிய மட்ட போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பினையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
0 Comments