Home » » ஒரு மாதம் முடிந்து மூன்று மாதமும் முடிந்துவிட்டது ஆனால் தீர்வில்லை – எல்லோராலும் ஏமாற்றப்பட்ட கல்முனை தமிழர்கள்! – கேதீஸ்

ஒரு மாதம் முடிந்து மூன்று மாதமும் முடிந்துவிட்டது ஆனால் தீர்வில்லை – எல்லோராலும் ஏமாற்றப்பட்ட கல்முனை தமிழர்கள்! – கேதீஸ்

ஒரு மாதம் முடிந்து   மூன்று மாதமும்   முடிந்துவிட்டது ஆனால் தீர்வில்லை – எல்லோராலும் ஏமாற்றப்பட்ட கல்முனை தமிழர்கள்! – கேதீஸ்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு காணி, நிதி அதிகாரங்களை வழங்குமாறு கோரி மூன்று மாதங்களின் முன்பு உண்ணாவிரதப்போராட்டம் இப்பிரதேச தமிழ் சிங்கள மககளால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த இம் மக்களின் இந்த நியாயமான கோரிக்கை அடங்கி போராட்டம் தேசிய ரிதியிலும் நாடாளுமன்றத்திலும் பேசு பொருளாக இருந்தன.
கல்முனையை நோக்கி பல கட்சி பிரமுகர்களும், அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் படையெடுத்தனர்.  முப்பது வருடங்களாக தரமுயர்த்தப்படாமலுள்ள கல்முனை வடக்கு பிரதேச செயலகம் கட்டாயம் தரமுயர்த்தப்படவேண்டும் ,இந்த நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டியதே என்று கூறினார்கள் வாக்குறுதிகளும் வழங்கப்பட்டன.
பொது பலசேனா பொதுச்செயலாளர் ஞானசார தேரர் வந்து ஒரு மாதத்தில் தீர்வு வரும் போராட்டத்தை கைவிடுங்கள் இல்லையென்றால் நானும் களத்தில் இறங்குவேன் என்று வாக்குறுதியளித்திருந்தார்.
அமைச்சர் மனோ கணேசன், அமைச்ர் தயாகமகே, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் மூன்று மாதத்தில் தீர்வு வரும் என்று கூறிச்சென்றார்கள். கொழும்பில் சந்திப்புக்களையும் நடாத்தினார்கள். ஞானசார தேரர் கூறிய ஒரு மாதம் கடந்த யூலை 22 ஆம் திகதியுடன் நிறைவடைந்துவிட்டது.   சுமந்திரன் எம்பி உள்ளிட்ட ஆழும் அரசு கூறிய மூன்று மாதமும் தற்போது முடிவடைந்துவிட்டது ஆனால் எந்த தீர்வும் இல்லை.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் தரமுயர்வு கோரிக்கை நூறு வீதம் நியாயமானது என்பது வெளிப்படையான விடயமாகவிருந்தும், இப்பிரதேச செயலகம் தரமுயர்வதால் முஸ்லிங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாதபோதும், இதனை வைத்து அரசியல் செய்யும் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் இதனை தடுத்து வருகின்றார்கள், இது தெரிந்திருந்தும்   இந்த அரசும்,  இந்த அரசை காப்பாற்றிய தமிழர்களின் வாக்கைப்பெற்றுவந்தவர்களும் கல்முனை பிரதேச தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைக்கு தீர்வை வழங்காததால் இம் மக்கள் கடும் ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளார்கள்.

மீள்பதிவு
கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் முப்பது வருடங்களாக தரமுயர்த்தப்படாமல்  தடுக்கப்படுகிறது.
-கேதீஸ் –
அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை காணி, நிதி அதிகாரங்களுடன் தரமுயர்த்துமாறு  இப்பிரதேச தமிழ் , சிங்கள மக்களினால் முன்வைக்கப்பட்டு வரும் நியாயமான கோரிக்கை கடந்த முப்பது வருடங்களாக  திட்டமிட்டு தடுக்கப்பட்டு வருகின்றது.
இதனை கண்டித்தும் பிரதேச செயலகத்திற்கான காணி, நிதி அதிகாரங்களை வழங்கி தரமுயர்த்துமாறு கோரிக்கை முன்வைத்து  கடந்த 17.06.2019 ஆம் திகதி முதல் சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டம்  மதகுருக்களான  கல்முனை சுபத்திரராமய விகாராதிபதி சங்கரத்தின  தேரர், கல்முனை ஸ்ரீ முருகன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்தக்குருக்கள், அருட்தந்தை கிருபைநாதன், மாநகரசபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன், அழககோன் விஜயரெத்தினம் தொழிலதிபர், லிங்கன் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டு  உண்ணாநிலை போராட்டம் ஆறு நாட்கள் தொடர்ந்தது. பின்னர் பல்வேறு தரப்பினாலும் வழங்கப்பட்ட வாக்குறுதிகளையடுத்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது
இப்போராட்டத்திற்கு  இந்து, பௌத்த, கிருஸ்த்தவ மதகுருக்ககளும், மக்களும், பொது அமைப்புக்களும், தமிழ் ,சிங்கள அரசியல் பிரதிநிதிகளும் பூரண ஆதரவையும் வழங்கி கொண்டிருந்தனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகமானது கல்முனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, நற்பிட்டிமுனை, ,சேனைக்குடியிருப்பு, துரைவந்தியமேடு, மணற்சேனை ஆகிய கிராமங்களையுடைய 29 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக   நிருவகிப்பதுடன், பௌதிக வளம், ஆளணிகளுடன் நிரந்தரமான கட்டிடத்தில் இயங்கிவருகின்றது.  ஆனால்  முப்பது வருடங்களாக நிதி மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படாமலும் அதற்கான அதிகாரிகள் வர்த்தமானி அறிவித்தலின்படி நியமிக்காது  இப்பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படாமல்  இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றது.
கல்முனை பிரதேசத்தில் நான்கு மதங்கள் காணப்படுகிறன,  மூவன மக்களும் வாழ்கின்றார்கள். இவர்களில் கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாக எல்லைக்குட்பட்டவர்களாக பெரும்பான்மையாக தமிழரும், சொற்பளவு சிங்களவருமாக இந்து, பௌத்தம், கிருஸ்த்தவ இஸ்லாம் மத மக்கள் வசிக்கின்றார்கள்.
இதேவேளை தனியாக முஸ்லிம் மக்களை மாத்திரம் உள்ளடக்கியுள்ள கல்முனை தெற்கு பிரதேச செயலகமானது சகல அதிகாரங்களுடனும் இயங்கிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு பல்வேறு கோரிக்கையை முன்வைத்து கடந்த முப்பது வருடங்களாக ஜனநாயக ரீதியில் போராடிவரும் இம்மக்களின் கோரிக்கையானது  இதுவரை நிறைவேற்றப்படாமல் குறுகிய அரசியல் நோக்கம்கொண்ட இனவாத அடிப்படைவாத கொள்கையுடைய முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் அதிகாரங்கள் பலத்தை பயன்படுத்தி தடுத்துவருகின்றனர்.  இதற்கு கடந்தகால அரசாங்களும் உடந்தையாக இருந்து வந்துள்ளமையும் கசப்பான உண்மையே.நாட்டில் காணப்பட்ட யுத்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி அரசில் அதிகாரங்களையும் ,சலுகைகளையும் பெற்றுவந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் பலத்தை பயன்படுத்தி கிழக்கில் தமிழர்களின் பல இடங்களை சூரையாடியதுடன் தனியாக முஸ்லிங்களுக்கான தனி நிருவாகங்களை உருவாக்குவதில் நீண்டகால திட்மிடலுடன் காய்களை நகர்த்தி உள்ளார்கள்.

இதற்கு அரசாங்கமும் கண்டும் காணததுபோல் இருந்ததன் விளைவுகளை இன்று கிழக்கில் இலகுவாக புரிந்துகொள்ளமுடிகின்றதுடன் அப்பாவி தமிழ் மக்கள் தங்கள் இருப்புக்களை தக்கவைப்பில் இன்றும் வீதியில் இறங்கி போராட் வேண்டிய துர்ப்பார்க்கிய நிலையே காணப்படுகிறது.
இந்நிலைமைகள் இனியும் தொடராது தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை இனவாத அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்குள் சிக்காது அரசாங்கம் வழங்க வேண்டும் என்பதே இன்று மக்களின் வேண்டுகோளாகும்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்படுவதால் முஸ்லிங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாதபோதும் அதனை முஸ்லிங்களுக்கு பாதிப்பு உள்ளது  போன்ற பொய் பிரச்சாரங்களை கல்முனை பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் தேர்தல் வாக்குகளுக்காக பரப்புரை செய்து அரசியலை செய்கின்றனர்.
ஆரம்ப காலத்தில் உதவி அரசாங்க அதிபர் காரியாலயங்களாக இயங்கிவந்து பின்னர் பிரதேச செயலகம், உப பிரதேச செயலகங்களாக இயங்க தொடங்கின. 1993 ஆம் ஆண்டு இலங்கையில் உருவாக்கப்பட்ட 28 உப பிரதேச செயலகங்களில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தவிர ஏனையவை பிரதேச செயலகங்களாக அதிகாரங்களுடன் தரமுயர்த்தப்பட்டுவிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கான அமைச்சரவை அங்கிகாரங்களும் பெற்றிருந்தும்; கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு மாத்திரம்  காணி, நிதி அதிகாரங்கள் வழங்குவததை   முஸ்லிம் அரசியல்வாதிகள் திட்மிட்டு தடுத்தே வருகின்றனர். கல்முனை பிரதேசத்தை சேர்ந்த ஒரு முஸ்லிம் அரசியல்வாதியான முன்னாள் இராஜாங்க பிரதி அமைச்சர் பகிரங்கமாகவே தாங்கள் தடையாக இருப்பதை ஒப்புக்கொண்டும் இருந்தார். குறுகிய அரசியலுக்காக இனங்களுக்கிடையில் விரிசல்களை ஏற்படுத்துவதை எந்த அரசும் அனுமதிக்க கூடாது.தமிழர்களுக்கும்  சிங்களவர்களுக்கு உரிய காணிகளை ,கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட  பல அரசகாணிகளை அரசியல்  அதிகாரங்களை பயன்படுத்தி கையகப்படுத்தி  தனியான முஸ்லிம் குடியேற்றங்களை  உருவாக்கியும்  உள்ளனர்.
வர்த்தக  கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த  கல்முனையை தனியாக முஸ்லிங்களின் அதிகார ஆக்கிரமிப்புக்குள் மாத்திரம்  வைத்திருந்து முஸ்லிம் மயமாக்கும்   திட்டமாகவும்  இதனை நோக்க முடியும்.கிழக்கில் தமிழர்களின் இருப்பை வளங்களை திட்மிட்டு அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தி சூறையாடியதோடு மட்டுமல்லாது, கிழக்கு மாகாணத்தில் தனியாக முஸ்லிம் மயமாக்கும் அதிகார நிருவாக கட்டமைப்பை உருவாக்குதல்  என பல விடயங்களை கச்சிதமாக செய்துமுடிக்கப்பட்டுள்ளன.
கல்முனை தமிழர்கள் பூர்வீகமான இடமாக உள்ளபோதும் வரலாற்றை திரிபு படுத்தி பொய்யான பரப்புரைகளை முஸ்லிம் அரசியல்வாதிகள் ஊடகங்களில் மேற்கொண்டுவருகின்றனர்.
மட்டக்களப்பில் தனியாக முஸ்லிம் பாடசாலைகளை மாத்திரம் உள்வாங்கி நிலத்தொடர்பற்ற முறையில் தனியான கல்வி வலயம் உருவாக்கப்பட்டுள்ளது.  ஓட்டமாவடியில் 16 கிராம சேவகர் பிரிவுகளை இரண்டாக பிரித்து பிரதேச செயலகங்களை உருவாக்கியுமுள்ளனர்.
கடந்த ஏப்பரல் 21 தாக்குதல் சம்பவங்களின் பின்னர் இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளின்  திட்டங்களை   இலகுவாக யாவரும் அறிமுடிந்திருந்தது முஸ்லிம் அரசயல்வாதிகளின் காய்நகர்த்தல்களுக்கும் இவற்றுக்கும் பெரிய வேறுபாடுகள்  உள்ளதாக தெரியவில்லை என்றே கூறலாம்.ஒரு இனத்தை  வஞ்சித்து குறிப்பிட்ட இனத்தின் ஆதிகத்தை வளர்க்கும் சூழ்ச்சிகளுக்கு அரசு இனியும் இடமளியாது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குபட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை , அடிப்படை அரச சேவைகளை தங்குதடையின்றி பெற்றிட கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான காணி, நிதி அதிகாரங்களை வழங்கி   அனைத்து மக்களும்  சேவைகளை சமமாக பெற்றிட வழிவகை செய்ய வேண்டியது அரசின் முக்கிய கடமையாகும்.
சேவைகளை அரச நிருவாக பணிமனையில்  தங்குதடையின்றி பெற முப்பது வருடங்களாக போராடி இன்றும் ஜனநாயக போராட்டத்தின் உச்சத்தில் உள்ள கல்முனை வடக்கு பிரதேச மக்களின் கோரிக்கையை இனியும் தாமதியாது  உடன் நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரினதும்  வேண்டுகோளாகும்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |