Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சாய்ந்தமருது மீனவர்கள் ஆறு நாளாகியும் வீடு திரும்பவில்லை : தொடரும் தேடலும், சோகமும்!!

நூருள் ஹுதா உமர்.
மாளிகைக்ககாட்டுத் துறையில் இருந்து கடந்த 18.09.2019ம் திகதி மூன்று மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்ற ஆழ்கடல் இயந்திரப் படகு ஆறு நாட்களாகியும் இதுவரை கரைதிரும்பவில்லை என அவர்களின் குடும்பத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.
சாய்ந்தமருதை சேர்ந்த சீனி முகம்மது ஜுனைதின் (வயது 36), இஸ்மா லெப்பை ஹரீஸ் (வயது 37 ) , காரைதீவை சேர்ந்த சண்முகம் சிரிகிருஷ்ணன் (வயது 47) ஆகிய மீனவர்களே குறித்த படகில் பயணம் செய்துள்ளதாக தெரிவித்த குடும்பத்தினர் அவர்களின் வருகைக்காக பெரும் அவாவுடன் காத்திருக்கின்றனர்.
இவர்கள் பற்றிய தகவல்களை பொலிஸ், கடற்படை ஆகியோருக்கும் அறிவித்துள்ளதுடன் மீனவ சங்கங்களும் கடந்த ஐந்து நாட்களாக தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளது.

UMAR LEBBE NOORUL HUTHA UMAR 
BBA (HRM), Dip.In. Journalism, IBSL, ICDL
+94 766735454 / +94 757506564

Post a Comment

0 Comments