Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் கத்தி , செயின் உடன் சென்ற மர்ம கும்பல் இளைஞர் மீது கத்திக்குத்து தாக்குதல்


மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி  பகுதியிலுள்ள உல்லாச விடுதியொன்றில் மர்ம குழுவினர் உட்புகுந்து முகாமையாளர் மீது கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்டதில் முகாமையாளர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை பகல் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த உல்லாச விடுதியில் கடமையாற்றிய ஊழியர் ஒருவரின்  செயற்பாடு காரணமாக அவரை கடந்த வாரம் கடமையிலிருந்து நிர்வாகம் அவரை  நிறுத்தியுள்ளனர். 

இதனையடுத்து குறித்த ஊழியர் முகாமையாளரை கொலை செய்வதாக தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர் இதனையடுத்து முகாமையாளர் முறைப்பாடு செய்வதற்கு  பொலிஸ் நிலையத்துக்கு சென்றபோது பொலிசார் ஒரு மணித்தியாலயத்தின் பின்வருமாறு தெரிவித்தனர். 

இதனையடுத்து முகாமையாளர் மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பிவந்துள்ளார் இந்த நிலையில் குறித்த ஊழியர் சுமார் 8 பேருக்கு மேற்பட்ட இளைஞர்களுடன் கத்தி மற்றும் இரும்பு கம்பி சைக்கிள் செயின் போன்ற ஆயுதங்களுடன் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சம்பவதினமான நேற்று பகல் 11 மணியளவில் குறித்த ஹோட்டலுக்குள் நுழைந்து முகாமையாளரை கத்தியால் குத்தியதில் முகாமையாளர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். என பொலிசார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் 







Post a Comment

0 Comments