Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த சிவாநந்தா தேசிய பாடசாலையின் ஆசிரியை திருமதி குணராசா மீனாட்சியம்மா ஓய்வு பெறுகின்றார்


திருமதி குணராசா மீனாட்சியம்மா மட் /குருக்கள்மடத்தில் 1959.09.23 பிறந்தவராவார். இவர் 1986 ம் ஆண்டு கலைமாணிப் பட்டத்தை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முடித்தவர். இவர் தனது முதலாவது நியமனத்தை 1988ம் ஆண்டு மட் /பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் மேற்கொண்டவர். இதன் பின்னர் மட் /எருவில் கண்ணகி வித்தியாலயம் பின்னர் மட் பட்டிருப்பு தேசிய பாடசாலை ஆகியவற்றில் கடமையாற்றி 2006 ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை தனது சேவையினை மட் சிவாநந்தா தேசிய பாடசாலையில் மேற்கொண்டவர். இவர் இங்கு தமிழ் மொழியும் இலக்கியமும் பாடத்தை  கற்பித்தவர். பலரது பாராட்டுதல்களோடு இன்று ஓய்வு பெறுகின்றார்.




Post a Comment

0 Comments