Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதித் தேர்தலுக்கு இடையூறு ஏற்படும் வகையில், எந்த இடமாற்றங்களும் மேற்கொள்ள வேண்டாம்


ஜனாதிபதித் தேர்தலுக்கு இடையூறு ஏற்படும் வகையில், எந்த இடமாற்றங்களும் மேற்கொள்ள வேண்டாம் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, பொது நிர்வாக அமைச்சிற்கு அறிவித்துள்ளது.

மாவட்ட செயலாளர்கள் மற்றும் கிராமசேவகர்கள் தற்போது சேவையாற்றும் இடத்திலேயே தொடர்ந்தும் பணிபுரிவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவ்வாறு இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் இந்தத் தீர்மானம எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ஓய்வுபெறவுள்ள மாவட்ட செயலாளர்களுக்கு சேவை நீடிப்பு வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொது நிர்வாக அமைச்சிற்கு, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது .

Post a Comment

0 Comments