Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஒலுவில் துறைமுக வீதி காணியொன்றில் ஆயுதங்கள் மீட்பு


ஒலுவில் துறைமுகத்திற்கு செல்லும் வீதியில் பாலமுனை பிரதேசத்திலுள்ள காணியொன்றில் T56 வகை துப்பாக்கியொன்று உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.



அரசாங்க புலனாய்வு சேவை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேர தெரிவித்தார்.

T56 துப்பாக்கியொன்று, அதற்கான 30 தோட்டாக்கள், மெகசின் ஒன்று, 07 டெட்டனேட்டர்கள், 04 ஜெலக்னைட் குச்சிகள், வயர், அமோனியா, யூரியா உள்ளிட்ட மேலும் பல்வேறு பொருட்கள் இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments