-அகரன்
இன்றைய தினம் வவுனியாவில் இருந்து யாழ் நல்லூர் நோக்கி தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் தியாகி திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபவனி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
தியாகி திலீபனின் நினைவு தினமானது தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் வருகின்றது ஆனால் திடீர் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இவ்வாறன நடைபவனி பேரணி மேற்கொள்ளப்படும் இச் செயற்பாட்டை பார்க்கின்றபோது வெறும் தேர்தல் அரசியலுக்கான பேரணியாகவே பார்க்கப்படுகின்றது.
இன்று தியாகி திலீபனின் தியாகத்தை வைத்து அரசியல் நடத்தும் இவர்களின் மூதாதையர்கள் தான் மலையகத்தமிழ் மக்களின் வாக்குரிமையை பறிப்பதற்கும் அவர்களை நாடுகடத்துவதற்கும் காரணமாக இருந்தவர்கள் இன்று தேசிய இன விடுதலைக்கு தன் இன்னுயிரை ஈர்ந்த திலீபனை வைத்து பிழைப்பு நடாத்துகின்றார்கள்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் என்பவற்றை கொள்கை அடிப்படையில் புறக்கணிப்பதாகக் கூறிக்கொண்டு உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியிட்டது மட்டுமன்றி மாகாண சபைதேர்தலிலும் போட்டியிடுவதற்கான உபாயங்களை இப்போதே வகுக்க தொடங்கிவிட்டனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 13ஆம் திருத்தச் சட்டம் ஒற்றையாட்சிக்கு உட்பட்டதொரு தீர்வென்ற அடிப்படையில்தான் இதைப் பூரணமாக நிராகரிக்கின்றது. கடந்த வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்ததற்கு அக்கட்சி வழங்கிய காரணமும் இதுவே. அப்படியென்றால் அதே ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு உட்பட்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இக்கட்சி போட்டியிடுவதன் காரணம் என்ன? போட்டியிடுவது இலங்கையின் அரசியலமைப்பினை ஏற்றுக்கொள்ளுகின்றனர் என்று பொருட்படுமா?
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை ஒரு நாடு இரு தேசம்' என்று கூறும்போது விடுதலைப் புலிகளின் தனி நாட்டுக் கோரிக்கையைப் புறக்கணிக்கிறனர். ஆனால் கஜேந்திரகுமாரின் தோழர்கள் விடுதலைப்புலிகளுக்கு அடுத்து தாங்கள் தான் தமிழீழம் பிடிப்போம் என்று மக்களை முட்டாள்கள் ஆக்குவதற்கு வீரவசனம் பேசி வருகின்றார்கள்
தமிழர்களின் உணர்வெழுச்சிப் போராட்டமாகவும் பிரகடனமாகவும் காலத்துக்கு காலம் முன்னெடுத்து வரப்படும் 'பொங்கு தமிழ்' நிகழ்வின் தொடர் வழியாக, 'எழுக தமிழ்' பார்க்கப்படுகின்றது. இவ் நிகழ்வை தமிழ் தேசிய மக்கள் முன்னணி புறக்கணித்திருந்தது இது தமிழ் மக்கள் மத்தியிலே முன்னணியினரின் சுயலாப அரசியலை படம்போட்டு காட்டியிருக்கின்றது.கள நிலை இவ்வாறிருக்க தம்மை தமிழ்த் தேசியத் தொண்டர்களாக தம்மை அடையாளாம் காட்டிக்கொண்டு தமிழ் மக்களின் உரிமைக்காவும் தேசிய இன விடுதலைக்காகவும் ஜந்து அம்ச கோரிக்கை முன்னிறுத்தி நீர் ஆகாரம் இன்றி உண்ணாவிரதம்; இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படா சமயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்த தியாகி திலீபனை இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தங்களது சுயலாப அரசியலுக்கும் தேர்தலில் வாக்குபெறுவதற்காகவும் திலீபனின் தியாகத்தை கொச்சைப்படுத்தி இன்று வாக்கு பிச்சை எடுக்கின்றனர் என புத்திஜீவிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
0 Comments