அநுராதபுரத்தில் வசிக்கும் சிங்கள இனத்தை சேர்ந்த இருவர் இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளமை அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அநுராதபுரத்தை சேர்ந்த எம்.ஐ.எம் ரத்நாயக்கா மற்றும் கஜசானி பூர்னிமா ஆகிய இருவருமே தமிழ் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
குறித்த தம்பதியினர் வவுனியாவில் உள்ள குருமன்காடு சிறீவிநாயகர் ஆலயத்தில் சிவசிறீ திவாஹரக்குருக்கள் தலைமையில் மந்திரங்கள் இடம்பெற்று இந்து முறைப்படி தாலி கட்டி திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
இந்த நிகழ்வை கேள்விப்பட்ட வவுனியா மாவட்டத்தை சேர்ந்த பலர் மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதித்துள்ளனர்.
சிங்கள இனத்தை சேர்ந்த இருவர் தமிழ் முறைப்படி வேட்டி சேலை அணிந்து திருமண பந்தத்தில் இணைந்துள்ளமை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
0 Comments