(படுவான் பாலகன்) கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்புமிக்கதும், தானாகதோன்றியதுமான கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய திருக்கொடியேற்றம் இன்று(01) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 05மணிக்கு இடம்பெற்றது.
வசந்த மண்டபத்தில் விசேட பூசை ஆராதனைகள் நடைபெற்றமையினைத் தொடர்ந்து, கொடித்தம்ப பூசையும், கொடியேற்றமும் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து சுவாமி உள்வீதி வலம் வருதலும் நடைபெற்றது.
சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக்குருக்கள் தலைமையில் பூசை ஆராதனைகள் நடைபெற்றமையுடன், பெருமளவிலான அடியார்களும் கலந்து கொண்டனர்.
கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இவ்வாலயத்தில் தொடர்ச்சியாக திருவிழாக்கள் நடைபெற்று, எதிர்வரும் 15.09.2019ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4மணிக்கு தோரோட்டமும், அடுத்த நாள் காலை(16.09.2019) தீர்த்தோற்சவத்துடன் ஆலய உற்சவம் நிறைவுபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


























0 Comments