கடந்த மே மாதத்தில் அகில இலங்கை ரீதியாக கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட நேர்முகப்பரீட்சையில் தெரிவாகி, திருமதி றூபினி தே.மை. டேவிட் தென்கொரியாவிற்கு மேற்படி நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்து கொண்டு நாடு திரும்பியுள்ளார். இவர் மட்டக்களப்பு மாவட்ட பட்டிருப்புக் கல்வி வலயக் கணினி வள நிலைய விரிவுரையாளராக கடமையாற்றுகின்றார். கிழக்குமாகாணத்தின் பிரதிநிதியாக இச்செயற்திட்டத்தில்கலந்து கொண்டாhர். இந் நிகழ்ச்சித் திட்டத்தில் ரொபோட்டிக் பயிற்சி, பாடசாலைச் சீருடையில் சிற்பம் செதுக்குதல், தென் கொரிய சீருடையில் பாரம்பரிய வாழிடத்தினை மதித்தல் போன்ற விடயங்களில் ஈடுபட்டு பல்வேறு அனுபவங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments