Home » » குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய வருடாந்த தேரோட்டமும். தீர்த்தோற்சவமும்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய வருடாந்த தேரோட்டமும். தீர்த்தோற்சவமும்


(ரவிப்ரியா)குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தின் மஹோற்சவம் இம்மாதம் 5ந் திகதி கொடியேற்றாத்துடன ஆரம்பமாகி 8நாட்கள் திருவிழாக்கள் நடைபெற்று 13ந் திகதி வெள்ளியன்று காலை தேரோட்டமும், மறுநாள் சனியன்று தீர்த்தோற்சவமும் நடைபெறும்.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் அருகே மதில்கள் முழுக்க மயில்கள் தொகை விரித்திருக்க, நல் விருட்சங்கள் ஆலயத்தை சூழ்ந்து வானை மறைத்து நிற்க, குருக்கள்மடத்தின் மத்திய பகுதியில் அழகுற எளிமையாக அடக்கமாக அமைந்ததுததான் மேற்படி ஆலயம். மூர்த்தி. தலம். தேர், தீர்த்தம் என முறையாக அமையப்பெற்றதுதான் இந்த திருத்தலம்.

அறுபடை வீட்டில் ஒன்றான கதிர்காமப் பதிக்கு அழகும் இயற்கை வனப்பும் கொண்ட பெருமை சேர்க்கும் திருப்பதியாக செல்லக்கதிர்காமம் இருந்து வருகின்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலத்தின் பெயர்தாங்கி குருக்கள்மடத்தில் அமையப்பெற்ற ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயம் கிழக்கில் பல நூற்றாண்டுகளைக் கடந்து அடியார்க்கு அருள்பாலிக்கும் அற்புத ஆலயமாகத் திகழ்;கின்றது.

இவ்வாலயம் செட்டிகுடி, பெரிய கவுத்தன்குடி, குருக்கள்குடி. தேவேந்திரக்குடி. பட்டணக்கடி, சிங்களக்குடி, கவுத்தன்குடி. வச்சினாகுடி. குருக்கள் அத்தியாகுடி, ,அத்தியாகுடி. தன்மன்செட்டிகுடி, என கிராமத்தின் மக்கள் குடி ரீதியில் ஒன்றிணைக்கப்பட்டு அவர்களுக்கான திருவிழாக்கள ஒழுங்கபடுத்தப்பட்டு; வழங்கப்பட்டு சீராகவம் சிறப்பாகவும் நடைபெறுவது மரபாகும்.

திருவிழாக் காலங்களில் கதிர்காமக் கோயிலின் முன் கொத்து பந்தல் இருப்பதுபோல், இவ்வாலயத்திலும் கொத்துப் பந்தல் அமைப்பது வழக்கமாகும். இவ்வாலயத்தின் ஆரம்காத்தாவான உலககுருநாதர் இவ்வாலயத்தை கொத்து பந்தலிட்டே அரம்பித்து வைத்தார். அதை நினைவூட்டுவதுபோல் ஆலய முகப்பில் இக் கொத்து பந்தல் விழாக்காலங்களில் காட்சியளிக்கின்றது.

இவ்வாலயம் அமையப்பெற்றுள்ள பகுதி வேதப்பிட்டி என வரலாறு கூறுகின்;றது. இங்கு சித்தர்களும் யோகிகளும் மடம் அமைத்து வேதம் போதித்ததாகவும் பல குருமார்கள் இங்கிருந்தே உருவானதாகவும் இங்கிருந்தே பல சஞ்சிகைகள், சுருதி நூல் என்பனவும் வெயிடப்பட்டதாகவும் வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே கிராமத்தின் பெயருக்கேற்ப குருக்கள் மடம் அமைத்து வேதம் போதித்தமையானது சமய வளர்ச்சியில் இவ்வாலயத்தின் கிராமத்தின் பங்களிப்பு காத்திரமாக இருந்திருக்கின்றது என்பது பெருமைக்கரிய விடயமாகும்.

இவ்வாலயத்தின் சிறப்புக்கு பல்வேறு சபன்றாதாரங்கள் இருக்கின்றன. கதிர்காமத் தொடர்பு ,மன்னர் மற்றும் பிரதானிகள் வருகை, கல்வெட்டுக்கள், செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டமை, சோழ பாண்டிய மன்னர் கால காசுகள் கண்டெடுக்கப்படடமை, ஊரில் கண்டெடுக்கப்படட பத்தினிச் சிலை பிரித்தானிய மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளமை,மற்றும் உலக குருநாதா, உலகநாச்சியார் வருகை, உலககுருநாரின் பேரன் வருகை, என பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது. அத்தகையோரின் பாதம் பட்ட புண்ணிய பூமியாக இது பெயர் பெற்று விளங்குகின்றது.

அக்காலத்திலேயே பேசப்பட் கிராமமான குருக்கள்மடத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் தற்போது அழகிய சித்திரத்தேரும் அமையப்பெற்ற ஆலயமாக ஆலயத்தின் வளர்ச்சிப் போக்கு களை கட்டி நிற்கின்றது.

வள்ளி. தெய்வானை சமேதராய் எழுந்தரளி தேரெறி முருகன் அருள்பாலிக்கும் தெய்வீகக் காட்சி காண மக்கள் வெள்ளம் கரைபுரண்டோடுவது இவ்வாலயத்தின் கீர்த்தியை வருடந்தோறும் மெருகூட்டிக் கொண்டிருக்கின்றது. பக்தர்கள் தொகை பன்மடங்க அதிகரித்துக் காணப்படுகின்றது.

இவ்வாண்டிற்கான மஹோ உற்சவம் சிவஸ்ரீ ஸ்கந்த உலககுருநாத குருக்கள் (கெருடலம்பதி பொற்றில் கந்தசாமி தேவஸ்தான பிரதமகுருவும் தர்மர்த்தாவும்) அவர்களின் குருவாசியுடன், மஹோற்சவ பிரதம குருவாக கிரியா காலமணி, கிரியாஜோதி, திருமுருக கலாமணி, ஈசானசிவச்சாரியார் சிவஸ்ரீ மா.குலேந்திரரூபசர்மா குருக்கள் (ஆலயத்தின் பிரதமகுரு, பெரியகல்லாறு சிவசுப்பிரமணியர் ஆலயத்தின் பிரதமகுரு) கிரியைகளை மெற்கொள்வார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |