Advertisement

Responsive Advertisement

தாமரை கோபுர நிர்மாணத்தில் 200 கோடி ரூபாய் காணாமல் போனது உண்மையா..?

தாமரை கோபுரத்தை நிர்மாணிக்கும் திட்டத்தில் 200 கோடி ரூபாய் காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி கூறியது உண்மை என்றால், அது குறித்து விசாரணை நடத்த ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.
200 கோடி ரூபாய் நிதி மோசடி நடந்திருக்குமாயின் அது சம்பந்தமாக தகவல்களை வெளியிட்டு, சம்பந்தப்பட்ட நபருக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்துனில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கூறியதற்கு அமைய 2012 ஆம் ஆண்டு இந்த திட்டத்தின் முதல் கட்டத்திற்காக 200 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. எனினும் பணம் செலுத்தப்பட்ட நிறுவனத்தை காணவில்லை. பணம் செலுத்தப்பட்டதாக கூறப்பட்ட நிறுவனம் வழங்கிய முகவரியில் அப்படியான வீதியே சீனாவில் இல்லை.
தற்போதைய அரசாங்கத்தின் மிக சிறிய தவறுகளுக்காக கூட ஆணைக்குழுக்கள் மற்றும் விசாரணை குழுக்களை நியமிக்க அவசரம் காட்டும் ஜனாதிபதி இது சம்பந்தமாக ஏன் இன்னும் அமைதியாக இருந்து வருகிறார்?. 200 கோடி ரூபாவுக்கு என்ன நடந்தது என்பதை அறிய விசாரணை நடத்த ஆணைக்குழுவை நியமித்து, உண்மையை வெளியிடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் துஷார இந்துனில் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments