Home » » கிழக்கு மாகாண மாணவர்களுக்கு இலவச துவிச்சக்கர வண்டிகள்

கிழக்கு மாகாண மாணவர்களுக்கு இலவச துவிச்சக்கர வண்டிகள்

கிழக்கு மாகாணத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு கொண்டு வருகின்றது.
அந்தவகையில் மட்டக்களப்பு - வாகரைப் பகுதியில் வைத்து நேற்று காலை துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதன்போது, திருகோணமலை - கும்புறுப்பிட்டி, மூதூர், கிளிவெட்டி ஆகிய பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் கிளி மக்கள் அமைப்பின் தலைவர் வைத்திய நிபுனர் சாதனந்தன், சர்வதேச இனைப்பாளர் வைத்தியர் மதியழகன், யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் மண்ணின் மைந்தன் வைத்தியர் சத்தியமூர்த்தி, வைத்தியர் ஜெயராசா, கள உத்தியோகத்தர், சந்திரமோகன் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் 1001 துவிச்சக்கர வண்டிகள் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்துக்கு 651 துவிச்சக்கர வண்டிகளும், ஏனைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு 50 துவிச்சக்கர வண்டிகளும் கட்டம் கட்டமாக வழங்கப்படுகின்றது.
கிளி மக்கள் அமைப்பின் 1001 துவிச்சக்கர வண்டிகள் திட்டத்தின் கீழ் கிளிநொச்சியில் 651 துவிச்சக்கர வண்டிகள், மன்னாரில் 50 துவிச்சக்கர வண்டிகள், முல்லைத்தீவில் 50 துவிச்சக்கர வண்டிகள், யாழ்ப்பாணத்தில் 60 துவிச்சக்கர வண்டிகள், திருகோணமலையில் 50 துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
வவுனியாவில் 50 துவிச்சக்கர வண்டிகள் , மட்டக்களப்பில் 50 துவிச்சக்கர வண்டிகள், அம்பாறையில் 50 துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட உள்ளன.
கட்டம் - 12: திருகோணமலை மாவட்ட கும்பிறுப்பிட்டி, கிளிவெட்டி, மூதூர் போன்ற பிரதேசங்களில் உள்ள தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு 50 துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கும்பிறுப்பிட்டி - மெதடிஸ் தமிழ் பாடசாலை மற்றும் மூதூர் - பாரதிபுரம் வித்தியாலயம், கிளிவெட்டி ஆகிய இடங்களில் நேற்று இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.
கட்டம் - 13 : வாகரை/ மட்டக்களப்பு மாவட்டம்
13ஆவது கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் வாகரையில் பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலயத்தில் நேற்று காலை 9 மணிக்கு ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளது.
கட்டம் - 14 : வாழைச்சேனை / மட்டக்களப்பு மாவட்டம்
வாழைச்சேனை - சந்திவெளி சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் 18/08/2019 காலை 9 மணிக்கு ஒரு தொகுதி வழங்கப்பட உள்ளது.
கட்டம் - 15 : செங்கலடி / மட்டக்களப்பு மாவட்டம்
செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தில் 18/08/2019 காலை 11 மணிக்கு மீதி துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட உள்ளது.
கட்டம் - 16 : அக்கரைப்பற்று / அம்பாறை மாவட்டம்
அக்கரைப்பற்று கண்ணகி வித்தியாலயத்தில் 18/08/2019 மாலை 2 மணிக்கு ஒரு தொகுதி வழங்கப்பட உள்ளது.
கட்டம் - 17 : திருக்கோவில் / அம்பாறை மாவட்டம்
திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு கணேஷ் வித்தியாலயத்தில் 18/08/2019 மாலை 4 மணிக்கு மிகுதி துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட உள்ளது.










Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |