இலங்கையில் புதிய வாகனங்களின் பதிவுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜுன் மாதம் இலங்கையில் குறைந்த எண்ணிக்கையிலான வாகனப் பதிவுகளே இடம்பெற்றிருந்த நிலையில், ஜுலை மாதம் அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன்படி கடந்த ஜுலை மாதம் மொத்தமாக 2,584 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், கடந்த ஆண்டு ஜுலை மாதம் மொத்தமாக 7,162 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments