Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு வான்பரப்பில் விசித்திரப் பொருள்! பீதியடைந்த மக்கள்?

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை முதல் வான்பரப்பில் விசித்திரமான பொருள் ஒன்று பறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்குடா பகுதியிலுள்ள ஓட்டமாவடி, மீராவோடை, வாழைச்சேனை போன்ற பிரதேசங்களில் இவ்வாறு குறித்த விசித்திரப்பொருள் தென்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
வெள்ளை நிறத்திலான பஞ்சு வகை போன்றதான ஒரு பொருள் பறந்து சென்றுள்ளதை மக்கள் அவதானித்துள்ளதாக தெரியவருகின்றது.

சிலர் கையிலெடுத்து பார்த்த போது அவை மென்மையாக காணப்படுவதாகவும் அதில் சிறு பூச்சி இனம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் வானில் பறந்த விசித்திர பொருளால் சற்று பீதியடைந்ததாக தெரியவருகின்றது.

Post a Comment

0 Comments