Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட பயங்கரவாதியின் உடற்பாகங்கள்! நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

சியோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதல் மேற்கொண்ட காத்தான்குடி தற்கொலை குண்டு தாரியின் உடல் பாகங்களை மீள் தோன்டி எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 26 திகதி மாலை இரகசியமாக மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட பயங்கரவாதியின் உடலை அடக்கம் செய்ததற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

வழங்கப்பட்ட உத்தரவிற்கமைய புதைக்கப்பட்ட உடல் பாகங்களை இன்று மாலை 4 மணியளவில் தோண்டி எடுப்பதற்குரிய நடவடிக்கைகள் நீதிமன்றதினால் மேற்கொள்ளப்படவுள்ளது. குறித்த வழக்கு தொடர்பாக நீதிபதி அரசாங்க அதிபரை கடுமையாக சாடியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுமக்களுக்கு பாதகம் ஏற்படாத வகையில் மாவட்டத்தில் உள்ள ஒரு மயானத்தில் புதைக்கவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்து மயானத்தில் புதைத்து பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த நீதிமன்றம் கட்டளை பிறப்பிக்கவில்லை எனவே அரசாங்க அதிபர் செய்த தவறே இந்த பிரச்சனைக்கு காரணம் என நீதிபதி கூறியுள்ளார்.

இதே நேரம் ஆர்ப்பாட்டத்தை தூண்டினார்கள் என்று பொலிசாரால் குற்றம் சாட்டப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், மாநகர சபை உறுப்பினர் செல்வி சுசிலா உள்ளிட்ட ஐவருக்கும் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

Post a Comment

0 Comments