Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ரணில் அரசின் ஊழல்களை விசாரிக்க மைத்திரி விடாப்பிடி!


நல்லாட்சி அரசின் ஆட்சிக்காலத்தில் 2015 ஜனவரி முதல் 2018 டிசம்பர் வரையான காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் ஜூலை மாதம் 18 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஒக்டோபர் 18 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன தலைமையிலான ஐந்துபேர்கொண்ட ஆணையம் கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அமைக்கப்பட்டது.இந்த ஆணையத்தின் ஏனைய உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசல வீரவர்தன, ஓய்வு பெற்ற கணக்காளர் நாயகம் பி.ஏ. பேமதிலக, முன்னாள் அமைச்சு செயலாளர் லலித் ஆர். டி சில்வா மற்றும் முன்னாள் டி.ஐ.ஜி எம்.கே.டி.விஜய அமரசிங்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

Post a Comment

0 Comments