Home » » மீண்டும் உடைக்கப்படும் கன்னியா வெந்நிரூற்று பிள்ளையார் ஆலய அத்திவாரம்

மீண்டும் உடைக்கப்படும் கன்னியா வெந்நிரூற்று பிள்ளையார் ஆலய அத்திவாரம்

திருகோணமலை, கன்னியா வெந்நிரூற்று பிள்ளையார் ஆலய அத்திவாரம் மீண்டும் உடைக்கப்பட்டு வருவதாக கன்னியா தென் கையிலை ஆதனத்தின் குரு முதல்வர் தவத்திரு அகத்திய அடிகளார் தெரிவித்துள்ளார்.
கன்னியா வெந்நிரூற்று பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,
அமைச்சர் மனோகணேசன் தலைமையிலான குழுவினர் கடந்த மாதம் பௌத்த குருமாருடன் கலந்துரையாடியதோடு ஆலயம் உடைக்கப்படும் வேலைகள் தடை செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த திங்கள் முதல் மக்கள் நடமாட்டம் இல்லாத சமயங்கள் மீண்டும் உடைக்கப்பட்டு வருகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக ஆலயத்தை உடைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களிடம் வினவிய போது, உடைப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளதாகவும் அதற்கான அனுமதிக் கடிதத்தை தமக்கு காட்டுவதாகவும் கூறியதாக குருமுதல்வர் தெரிவித்துள்ளார்.
இக்கடிதத்திற்கான அனுமதி 12.06.2019 கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அதனைப் போல சம்மந்தப்பட்ட அமைச்சுக்களிடமும், ஜனாதிபதி செயலகத்திடமும் இருந்து அனுமதி பெற்று இந்த பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஆலயத்தை உடைக்கும் பணியில் ஈடுபடும் தரப்பினர் கூறியதாக குரு முதல்வர் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் அமைச்சர் மனோகணேசன் ஆகியோருக்கு தெரியப்படுத்தியுள்ளோம் எனவும் குரு முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |