Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்! ஆதாரங்களை வெளிப்படுத்தும் சுமந்திரன்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான கணக்காளர் நியமனம் தொடர்பான ஆதாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ளார்.
கல்முனை வடக்கு தமிழ் பிரதேசசெயலகத்தை தரமுயர்த்தும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக, அதிகாரம்மிக்க கணக்காளர் ஒருவர் இன்றையதினம் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டது.
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமயத்தில், தமிழ் மக்களின் கடுமையான அழுத்தங்களையடுத்து, கல்முனை விவகாரத்தில் உறுதியான நிலைப்பாடு எடுக்க வேண்டிய நெருக்கடி தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஏற்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சருடன் நடந்த சந்திப்பையடுத்து, கணக்காளரை நியமிக்க அரசு சம்மதித்திருந்தது.
இந்நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுதல் சம்பந்தமாக பல பொய்ப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என தெரிவித்து குறித்த நியமனம் தொடர்பான கடிதங்களை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Post a Comment

0 Comments