Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வெளிநாடுகளிலிருந்து திடீரென அழைத்து வரப்பட்ட 858 இலங்கைப் பெண்கள்! காரணம் இது தான்..

வெளிநாடுகளில் உள்ள தூதரங்களின் தொழிலாளர் பிரிவின் கீழ் உள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருந்த 858 பணிப் பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டால் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அத்தோடு சவுதியிலிருந்து 18 பேர், ஜோர்தானிலிருந்து 12 பேரும் இவ்வாறு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
2019 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் 95,908 பேர் தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ளதுடன், அதில் 56,526 பேர் ஆண் தொழிலாளர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் அதிகமாக ஆண் தொழிலாளர்கள் கட்டார் நாட்டிற்கு சென்றுள்ளதுடன், அவர்களின் மொத்த எண்ணிக்கை 16,626 ஆகும்.
2019 ஜூன் மாதம் வரையான காலத்தில் 39,382 பெண் தொழிலாளர்கள் வெளிநாடு சென்றுள்ளதுடன் அது மொத்த வெளிநாடு சென்றுள்ள தொழிலாயர்களில் 41 வீதம் எனதட தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சவுதி நாட்டுக்கு தொழிலுக்காக சென்றுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 16,747 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments