Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

லொறி ஒன்றில் பாரிய இரசாயன பெரல்கள்! தற்கொலை தாக்குதலுக்கு தயாராக இருந்த 11 தற்கொலைதாரிகள்..

தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் ஆயுதப் பிரிவு பொறுப்பாளரான அஹமத் மிலான் என்பவரின் வழிநடத்தலின் கீழ் மீண்டும் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பல இடங்களில் தாக்குதல் மேற்கொள்வதற்கு 11 தற்கொலைதாரிகள் தயார் நிலையில் இருந்ததாக பயங்கரவாத விசாரணை பிரிவு விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலுக்காக கல்முனை சியாம் மற்றும் மொஹமட் நிஸான் என்பவர்கள் உதவியுள்ள நிலையில் அவர்கள் கிழக்கு மாகாணத்தில் 5 வீடுகளை வாடகைக்கு பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய நீர்கொழும்பில் வீடு ஒன்றில் இருந்து லொரி ஒன்று வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு சம்மாந்துறைக்கு சென்றுள்ளதாக சம்பந்தப்பட்ட சாரதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெருந்தொகை இரசாயன திரவங்கள் அடங்கிய பெரல்கள் லொரியில் ஏற்றப்பட்டதாக சாரதி தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடைய அனைத்து தேசிய தவ்ஹித் ஜமாத் பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments