Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொழும்பில் இரு மணித்தியாலங்களில் வசமாக சிக்கிய நூற்றுக்கணக்கானோர்

கொழும்பில் நேற்றைய தினம் இரு மணித்தியாலங்களுக்குள் நூற்றுக்கணக்கான சாரதிகள் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.
இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரில் நேற்று இரு மணித்தியாலங்கள் வீதி விதிமுறைகளை மீறுவோர் தொடர்பில் விசேட கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது 582 சாரதிகள் வீதி விதிமுறைகளை மீறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர்களுக்கு எதிராக சிசிரிவி காணொளிகளை பயன்படுத்தி வழக்கு தொடர்ப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வீதி விதிமுறைகள் மீறல்களுக்காக வாகன சாரதிகளிடம் அறவிடப்படும் அபராத தொகைகள் அதிகரிப்பு தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட வாகன போக்குவரத்து சட்டத் திருத்தத்திற்கு அண்மையில் நாடாளுமன்றம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments