Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மக்களின் நலன் கருதி இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்கள் மேற்கொண்ட சேவை

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தேசிய ஊழியர் சங்கப் பிரதிநிதிகளால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட பணிப்பகிஷ்க்கரிப்பு கிழக்கு மாகாணத்தில் தோல்வியடைந்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையினர் நேற்று முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்க்கரிப்பினை மேற்கொண்டிருந்தனர் அதேவேளை இன்று கிழக்கு மாகாணத்தில் பணிப்பகஷ்கரிப்பு இன்றி வழமைபோல் மட்டக்களப்பு பேருந்து நிலையத்திலிருந்து சகல உள்ளுர் சேவைகளும் தூர இடங்களுக்கான சேவைகளும் வழமைபோல காலையிலிருந்து மேற்கொண்டிருந்தன.
இப்பணிப்பகிஷ்கரிப்பினை புறக்கணித்த மட்டக்களப்பு ஊழியர்கள் மக்களுக்கான போக்குவரத்துச் சேவையினை வழங்கியதனால் மக்கள் தங்களது அன்றாட கடமைகளை இலகுவாக மேற்கொள்கின்றனர்.
பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுத்திருந்தால் தூர இடங்களுக்கு தொழிலுக்குச் செல்லும் உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் தனிப்பட்ட பிரயாணிகளென பலரும் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பார்கள்.
இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க அரசாங்கம் மக்கள் பிரதிநிதிகள் உரிய கவனம் எடுக்க வேண்டுமெனவும் இவ்வேளையில் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றர்.










Post a Comment

0 Comments