Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் அரசாங்க மற்றும் தனியார் இணைய தள உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இலங்கையில் அரசாங்க மற்றும் தனியார் துறை இணைய தள உரிமையாளர்களுக்கு சைபர் தாக்குதல் தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சைபர் தாக்குதலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேற்படி பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிது மீகாஸ்முல்ல தெரிவிக்கையில், சில இணையதள உரிமையாளர்கள் இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
அதேவேளை நேற்று சைபர் தாக்குதலுக்கு இலக்கான டொட் கொம் மற்றும் டொட் எல்.கே ஆகிய இணையத்தள முகவரி பரப்புகளை கொண்ட பல இணையத்தளங்கள் வழமை நிலைக்கு திரும்பியுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments