Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாடசாலை தவணைப் பரீட்சை -இறுதித் தீர்மானம் மேற்கொள்ளவுள்ள கல்வி அமைச்சர்!

பாடசாலை தவணை பரீட்சைகளை நடத்தும் நடைமுறை தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
பாடசாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதனால் பெற்றோர் எதுவித அச்சமும் இன்றி தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கும்படி அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து மூடப்பட்ட பாடசாலைகளின் கலவிச்செயற்பாடுகள் கடந்த ஆறாம் திகதி தரம் 6 க்கு மேற்பட்ட வகுப்புக்களுக்கும் கடந்த 21 ஆம் திகதி தரம் 1 முதல் 5 வரையான வகுப்புக்களுக்கும் ஆரம்பிக்கப்பட்டபோதிலும் மாணவர்கள் பெருமளவில் பாடசாலைக்கு சமுகமளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் பாடசலைகளுக்கான பாதுகாப்பை இராணுவத்தினரும் பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments