Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கைக்கு புர்கா பொருத்தமானதல்ல!

நாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்திற் கொள்ளும் போது இலங்கைக்கு புர்கா பொருத்தமானதல்ல எனவும் எனவே இலங்கையில் புர்கா பயன்பாட்டை முழுமையாக தடை செய்ய வேண்டும் என சட்டத்தரணிகள் தெரிவித் துள்ளனர்.

புர்காவை இலங்கையில் தடை செய்வதற்காக முஸ்லிம் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

சிறிது காலம் சென்ற பின்னர் புர்காவினால் மீண்டும் பிரச்சினை ஏற்படும். மீண்டும் அதனை சரி செய்து கொண்டிருப்பதற்கு பதிலாக இலங்கையில் முழுமையாக புர்கா தடை செய்யப்பட வேண்டும் என்பதே எனது கருத்தாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவசர கால சட்டத்தின் கீழ் முகத்தை முழுமையாக மறைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் நீக்கப்பட்ட பின்னர் அந்தத் தடையும் நீங்கும் என சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், சட்டத்தரணி மனோஷ் கமகே தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments