Home » » விடுதலைப்புலிகளுடன் யுத்தம் இடம்பெற்றபோதுகூட இவ்வாறு நடக்கவில்லை! காத்தான்குடி மக்கள்!

விடுதலைப்புலிகளுடன் யுத்தம் இடம்பெற்றபோதுகூட இவ்வாறு நடக்கவில்லை! காத்தான்குடி மக்கள்!

இடம்பெற்ற குண்டுதாக்குதல்களுக்கு பின் காத்தான்குடி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு முழு கண்காணிப்பில் உள்ளது இதனால் கிராமத்துக்கு வரும் வெளியார் குறித்தும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதுடன் மக்களின் தொலைபேசிகளும் கண்காணிக்கப்படுவதால் தொலைபேசி உரையாடுவதையும் அம்மக்கள் தவிர்த்து வருகின்றனர்.
காத்தான்குடி மக்களின் வியாபார நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி வர்த்தகர்களுக்கு அயல் கிராமங்களில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் உள்ள வர்த்தக நடவடிக்கைகளை முடித்து கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறது. இதனால் காத்தான்குடி மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி அரச உத்தியோகத்தர்களை ஏனையோர் சந்தேகத்துடன் பார்ப்பதாகவும் தம்முடன் உரையாட தயங்குவதாகவும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கூட தம்மால் சுதந்திரமாக நடமாட முடிந்தது தமது அன்றாட மார்க்க கடமையை கூட செய்ய முடிந்தது தற்போது தடை ஏற்பட்டுள்ளது.
ஊருடன் ஒத்து போகாது தனி வழி நடந்த ஒருவனது மிலேச்சத்தனமான கொலைவெறிக்கு முழு காத்தான்குடி சமூகமும் வெட்கி தலைகுனிந்து வேதனை பட வேண்டிய நிலை தமக்கு ஏற்பட்டுள்ளதாக பெயரை குறிப்பிட விரும்பாத மௌலவியொருவர் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |