Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சம்மாந்துறையில் வரலாற்று பிரசித்தி பெற்ற ஆலய வளாகத்தில் மீண்டும் ஆயுதங்கள் அடங்கிய பொதி


சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலய வளாகத்திற்குள் வீசப்பட்டிருந்த நிலையில் ஆயுதங்கள் அடங்கிய பொதியொன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.
ஆலய காவலாளி கொடுத்த தகவலின்டி ஆலய நிர்வாகசபை உறுப்பினர் மற்றும் ஆலயத்தலைவர் ஆகியோர் புலனாய்வு பிரிவிற்கும், பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து ஆயுதங்கள் அடங்கிய பொதி மீட்கப்பட்டு சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை கடந்த சனிக்கிழமை மாலை 5 மணியளவில் வரலாற்று பிரசித்தி பெற்ற அதே ஆலய வளாகத்திலுள்ள வாழை தோட்டத்திலிருந்து இருந்து ரி 56 ரக துப்பாக்கி, ரவை கூடு, கோடாரி மற்றும் வாள் என்பன அடங்கிய பொதியொன்று மீட்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்றைய தினமும் மேற்படி ஆயுதங்கள் அடங்கிய பொதி மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments