Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஊரடங்கு உத்தரவு குறித்து பொலிஸ் பேச்சாளர் விடுத்துள்ள அறிவிப்பு!

வடமத்திய மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டிருக்கு ஊரடங்கு உத்தரவில் சிறு தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
இதன்படி இரண்டு மணி நேர தளர்வாக மாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிவரை இந்த தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நன்மை கருதியே இந்த இருமணிநேர தளர்வு ஏற்படுத்தபடுவதாக கூறப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் வடமத்திய மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்திலுள்ள முஸ்லிம் கிராமங்கள் சிலவற்றில் சிங்கள குண்டர்களால் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டமையைத்தொடர்ந்து இந்த ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு நேற்றிரவு ஒன்பது மணிக்கு அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று காலை நான்கு மணிக்குத் தளர்த்தபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments