Home » » மட்டக்களப்பு நகரின் நடுவே பயங்கரமான பகுதி? அச்சமடையும் பொதுமக்கள்!

மட்டக்களப்பு நகரின் நடுவே பயங்கரமான பகுதி? அச்சமடையும் பொதுமக்கள்!



மட்டக்களப்பு நகரின் மத்தியில் அடர்ந்த காடுகளாக காட்சியளிக்கும் பயங்கரமான பாழடைந்த கட்டிடம் தொடர்பாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக நகரத்தின் மத்தியில் இப்படி ஒரு இடத்தை அரச அதிகாரிகள் பாராமுகமாக விட்டுள்ளமை மிகப்பெரிய சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது ஒரு அரசாங்க களஞ்சியசாலை கட்டிடம் எனவும் குறித்த பகுதியை அரசாங்க அதிகாரிகள் கைவிட்டு விட்டனர் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர்.
மட்டக்களப்பு கள்ளியங்காடுஇருதயபுரம் கிழக்கு கிராமசேவகர் பிரிவு சேமைக்காலைக்கு முன்னால் உள்ள அரச கட்டிடம் (களஞ்சியசாலை) தற்போது கவனிப்பாரற்று காடு மண்டி கயவர்களின் சட்டவிரோத செயற்பாடுகளின் கூடாரமாக காணப்டுகிறது .
குறித்த பிரதேசத்தில் பல சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதுடன் குறித்த கட்டிடத்திற்குள் எது நடந்தாலும் வெளியில் உள்ளவர்களுக்கு பார்க்கவோ, கேட்கவோ முடியாது எனவும் இது தொடர்பாக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இது வரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |