வன்னி மாவட்டத்தில் வெளிநாட்டு நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டு வரும் தண்ணீர் தாங்கிகள் சில உதவிகள் வழங்கிய இடங்களிலே தனி அரபு மொழியிலேயே பதாதைகளில் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளதைப்பார்க்கும்போது கவலையளிக்கின்றது என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
இன்று வன்னி மாவட்ட தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எமது நாடு சிங்கள தமிழ் மொழி நாடு இரண்டு மொழிக்கான நாடாக இருந்து கொண்டு வேறு புரியாத மொழியிலான வாசகங்கள் இங்குள்ள முஸ்லிம் மக்களுக்குக்கூட புரிந்து கொள்ள முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. வேறு மொழியான அரபு மொழியிலேயே பல இடங்களில் பதாதைகள் பொறிக்கப்பட்டுள்ளதை எங்களால் காணக்கூடியதாக உள்ளது. இன்று அல்லாகு அக்பர் என்று சொல்லிக்கொண்டு மனித படுகொலைகள் செய்கின்றார்கள்.
கடந்த காலங்களிலே கோழிகளை, ஆடுகளை, மாடுகளை வெட்டுவதற்கும் தான் அல்லாகு அக்பர் என்று சொல்வார்கள் இன்று மனிதர்களை படுகொலை செய்வதற்கு அந்தப் பெயர்களைப் பாவித்திருப்பதைப் பார்க்கக்கூடியதாக உள்ளது.
இஸ்லாமியர்கள் தமிழ் முஸ்லிம்கள். காலம் மாறிய போது அதிகளவான முஸ்லிம்கள் அரபுமொழி ஆதிக்கத்தை செலுத்தி அரேபியக்கலாசாரத்தை எமது நாட்டிற்குள் கொண்டு வந்ததினால் தான் இன்று முஸ்லிம்கள் பிறிதொரு பிரிவினர் என்ற பிரிவினையை உருவாக்கி வைத்துள்ளது.
ஆகவே இந்த அரேபியக்கலாசாரம் முற்றாக நிறுத்தப்படவேண்டும் வன்னி மாவட்டத்திலுள்ள அரபு மொழிகளிலே எழுதியுள்ள அனைத்து வாசகங்களும் முற்று முழுதாக அழிக்கப்படவேண்டும் இது சம்பந்தமாக நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசனிடமும் நாங்கள் தெரிவிக்க இருக்கின்றோம்.
எமக்குப்புரியா எமக்கு சம்பந்தமில்லாத அரபு மொழியில் வன்னி மாவட்டத்திலுள்ள வாசகங்கள் நிச்சயமாக அகற்றப்படவேண்டும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments: