Home » » சிறிலங்காவில் சிங்களம், தமிழுக்கு பதிலாக அரபு மொழி, அரபு உடை, அரபு கலாசார நிகழ்வு

சிறிலங்காவில் சிங்களம், தமிழுக்கு பதிலாக அரபு மொழி, அரபு உடை, அரபு கலாசார நிகழ்வு

அரபு மொழியையும், அரபு கலாசாரங்களையும் இங்கு கொண்டுவர சில முஸ்லிம் தரப்பினர் கடந்த இரண்டு தசாப்தகாலமாக முற்பட்டு வருவதாக மாநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
சர்வதேச பயங்கரவாதம் உயிர்பெறுவது சமூக வலைத்தளங்களிலாகும். 
முகநூல் அல்லது ஏனைய சமூக வலைத்தளங்களில் உள்ள உபாயமார்கங்களின் ஊடாகத்தான் சர்வதேச பயங்கரவாதம் தலைத்தூக்கி வருகிறது.
ஆகவே, எமக்கு புதிய சட்டங்கள் அவசியம். சர்வதேச பயங்கரவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் ஒழிக்கும் புதிய சட்டங்களை உருவாக்குவதுதான் பாராளுமன்றத்தின் ஊடாக நாம் செய்ய வேண்டிய முதல் பணியாகவுள்ளது. 
அதேபோன்று எமது நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கும் பாரிய பொறுப்பொன்றுள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களாக இலங்கையின் கலாசாரம் மற்றும் தனித்துவத்தை பேணுவதற்கு பதிலாக அரபு கலாசாரத்தையும், அரபு தனித்துவத்தையுமே இந்நாட்டில் உருவாக்க சிலர் முயற்சிக்கின்றனர். 
சிங்களம், தமிழ் மொழியை கற்றுக்கொள்வதற்கு பதிலாக அரபு மொழியை கற்றுக்கொள்கின்றனர். அதேபோன்று அராபிய உடைகளையும், கலாசார நிகழ்வுகளையும் இங்கு கொண்டுவருகின்றனர் என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |